சின்னம்மா சொல்லலுல | mathimaran Speech | வே.மதிமாறன் பேச்சு |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2021
  • ஏன்? என்னாயிற்று?
    தமிழ் சினிமாவில் ஒரு பாடகரின் குரல், நடிகருக்கு இவ்வளவு நெருக்கமாக நடிகரே பாடியது போல் அமைந்ததில் நடிகர் நாசர் முதல்முறையாக இயக்கி நடித்த அவதாரம் படத்தில் இடம் பெற்ற‘ஒரு குண்டுமணி குலுங்குதடி..’ இந்தப் பாடல்தான் முதன்மையானது.
    பாடல்களை கேட்ட என் அனுபவதில்; டி.எம்.எஸ். - சிவாஜி, டி.எம்.எஸ். - எம்.ஜி.ஆர், ஜெமினி - பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்னும் வெற்றிகரமாக உலா வந்த பல குரல்களும்.. இந்த ஒரு பாடலில் நாசருக்கு இளையராஜா அவர்களின் குரலின் பொருத்தம்போல் அமைந்ததற்கு அடுத்துதான்.
    ‘தனதந்தானன...தந்தனனானா.. தந்தன தந்தன.. தந்தனா.. என்னண்ணணே.. அக்கா முன்னாடியெல்லாம் பாடச் சொல்றீங்க.. அட தாளம் வேற போட்டிங்க..’ என்ற பாட ஆரம்பித்தவுடன் சட்டென்று வருகிற ராஜாவின் அந்த சிரிப்பு அப்படியே நாசரை நிறுத்துகிறது.
    ‘சொல்லுற சொல்லுல’ என்றுதான் வரவேண்டும் ஆனால்..
    ‘சின்னம்மா சொல்லலுல சொல்லுல...’ என்று பாடுவதிலும் அதே டெம்போவில் ‘நல்லாயிருக்கா..’ என்று கேட்கிற உச்சரிப்பிலும் உள்ள அப்பாவித்தனம் பாடல் முழுக்க நிரம்பி வழிவது அழகோ அழகு.
    தெருக்கூத்துக் கலைஞன் பாடுகிற நாட்டுப்புறப்பாடல் என்பதால் தெருக்கூத்து பாடலில் உள்ள கூறுகளை சேர்த்துக் கொண்டு அந்த எளிமை கெடாமல், அதை நுட்பமான இசையாக உயர்த்துகிற அவரின் இசைப்பேரறிவு. இடையிசை தன் பணியால் பாடலை கூடுதல் இனிமையாக்குகிறது.
    ‘காயாத கானகத்தே...’ தொடர்ந்து அதை ஆலாபனை செய்து ‘ஏய்..’ என்று அழுத்தம் கொடுத்து கம்பீரமாக உச்சரித்து, அந்த ஆலாபனையை முடிக்கும் இடம் அட்டகாசம்.
    ‘முருகனுக்கு.. இன்னாத்துக்கு.. அடவு கட்டும் பொயப்பு..’ இதில் ‘இன்னாத்துக்கு’ ‘பொயப்பு’ என்கிற இந்த உச்சரிப்பு தமிழகத்தின் வட மாவட்டங்களை குறிப்பாக வடஆற்காடு, காஞ்சிபுரம் வட்டார வழக்கைச் சேர்ந்தது.
    தெருக்கூத்து கலையும் இந்த மாவட்டங்களில் மட்டும்தான். அதனாலேயே அந்த உச்சரிப்பை செய்திருக்கிறார்.
    ‘பொயப்பு’ - ‘இன்னாத்துக்கு’ என்கிற இந்த சொற்களை பேசுகிற எளிய சென்னை மக்களையும் அவர்கள் உச்சரிப்பையும் கேலி பேசுகிறவர்களை பார்த்து கிண்டல் செய்கிறது ராஜாவின் இந்த உன்னத உச்சரிப்பு.
    இந்தப் பாடலை வேறு பாடகர்கள் பாடுவதுபோல் கற்பனை செய்து பார்பதற்குக் கூட பொருத்தமற்றதாக மாற்றியிருக்கிறது எளிய தமிழனின் குரலாக ஒலிக்கிற ராஜாவின் குரல்.
    ஸ்லோ ரிதத்தில் சவகாசமாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல், கடைசி சில நொடிகளில் மேலே உயர்ந்து உச்சஸ்தாயியில் முடியும்போது, சர்வதேச தரத்தை சடாரென்று எட்டிப் பிடிக்கிறது.
    TO SUBSCRIBE / vemathimaran view_as=subscriber
    vemathimaran.com/
    / mathimaranv
    / mathimaran
    #nasar #ila #avatharam # # #latest

ความคิดเห็น • 42

  • @rajandhandapani2763
    @rajandhandapani2763 2 ปีที่แล้ว +13

    நான் பல முறை இந்த பாடலை கேட்டு இருக்கிறேன். தங்கள் பகுப்பாய்வு மிக சிறப்பாக உள்ளது

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வேதிமாறன்

  • @ramkumareye999
    @ramkumareye999 2 ปีที่แล้ว +1

    Great analysis...

  • @ramkumareye999
    @ramkumareye999 2 ปีที่แล้ว

    வாழைப்பழம்...❤️🙂😍

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 2 ปีที่แล้ว +3

    எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாத பாடல் இது.
    தங்களின் இசை பற்றிய பதிவு மிக அருமை வாழ்த்துகள் தோழர்!

  • @freeworld8898
    @freeworld8898 2 ปีที่แล้ว +1

    நன்றி!!!

  • @suriyakumar3944
    @suriyakumar3944 2 ปีที่แล้ว

    Super sir

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 2 ปีที่แล้ว +5

    ஏன் மதி. மழை வெள்ளம் புரட்டி போடும் நேரத்தில் இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா தம்பி.... முதல்வருடன் நிற்க வேண்டுகிறேன் 🙏

  • @anbalaganbalakrishnan80
    @anbalaganbalakrishnan80 2 ปีที่แล้ว +1

    சுவாரஸ்யமான விமர்சனம்..👌

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 2 ปีที่แล้ว +1

    🖐🤜🤛👊✊✍✍✍👍🤝

  • @Joker_Kid
    @Joker_Kid 2 ปีที่แล้ว +15

    மைக் மோகன் சினிமா கேரியர் வெற்றி பெற காரணம்...
    மூன்று பேர் இளையராஜா, எஸ்.பி.பீ, எஸ்.என்.சுரேந்தர்...!

    • @harishg1507
      @harishg1507 2 ปีที่แล้ว

      அதை விட கோவை Chezhiyan .

  • @ilayavancomposer839
    @ilayavancomposer839 2 ปีที่แล้ว +2

    எமக்குத்தெரிந்து ஒரு இசையமைப்பாளனாய்.. மதிமாறருடைய அரசியல் பதிவையும்.. கலைத்துறை சார்ந்த பதிவுகளையும் கேட்டு வியந்திருக்கிறேன்.. தமிழகத்தை பொருத்தவரை அரசியலும் கலையும் கலந்த ஒரு மாநிலம் நமது என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் இங்கு.. இன்று.. கர்நாடக இசைக்கு விமர்சகரான ஒரு சுப்புடுவைப்போல.. மதிமாறருடைய மதிநுட்பத்தால் சமீபகாலமாக வந்து கொண்டிருக்கும் சமகால திரைத்துறை சார்ந்த பதிவுகள் அவரை நம் மனதில் சம்மணமிட்டு உட்காரவைத்து விடுவதில் சந்தேகமில்லை.. உங்கள் சமூக அரசியல்.. கலைப்பணி சிறக்கட்டும்.. வாழ்த்துகள் மதிமாறரே..

  • @harishg1507
    @harishg1507 2 ปีที่แล้ว

    Another reason is Gemini's personality was soft and romantic, which is why P.B.Srinivas and A.M.Raja voices suited him best .

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 ปีที่แล้ว +1

    Maran அய்யா சூப்பர் 👍👌

  • @BalaMurugan-oj4bb
    @BalaMurugan-oj4bb 2 ปีที่แล้ว +1

    உண்மையே

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว

    இளையராஜா + நாசர் =
    அற்புதம் ! ❤️
    எனது நீண்ட நாள் மனக்கிடங்கிலிருந்தது !

  • @hemavathybabu8917
    @hemavathybabu8917 2 ปีที่แล้ว +1

    Great composer. Great analyser

  • @hariprabhu755
    @hariprabhu755 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @hra345
    @hra345 2 ปีที่แล้ว +1

    Exactly....I like thendral vandhu....song very nice.....
    Exactly valapalam itself wrong....but they tease us vayaipayam...
    Tamil cinema only tease norrhen tamilnadu Tamil always.....

  • @franciscasimirs839
    @franciscasimirs839 2 ปีที่แล้ว +1

    Agreed 👍

  • @yousaymyname5174
    @yousaymyname5174 2 ปีที่แล้ว +7

    என் உயிர் தோழன் படத்தில் வரும் பாடல் மச்சி மன்னாரு மிரட்டியிருப்பார். அதையும் கொஞ்சம் இரசித்து எங்களுக்கு புரியாததை விளக்கவும் என்பது நேயர் விருப்பம். முன்பண நன்றிகள். 🤗

  • @hemavathybabu8917
    @hemavathybabu8917 2 ปีที่แล้ว

    Good assessment. 👍👍👍👍👍

  • @evrambi6563
    @evrambi6563 2 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤💐💐💐💐💐

  • @rajthilakelango4781
    @rajthilakelango4781 2 ปีที่แล้ว +1

    Ilayaraja for Janagaraj is also a super combo. Kadhal enbadhu from Palaivana Rojakal.

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 2 ปีที่แล้ว

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER BRO VE.MATHIMARAN

  • @sivachandar1272
    @sivachandar1272 2 ปีที่แล้ว +1

    A very sharp observation.
    My brother did infact was under the mistaken belief that it was the actor Nassar who sang the song for a very long time . I too was also under the same impression getting deceived that it was actor Nassar who sang it equally for a very long time.
    Only difference was , I felt , that for the song " Thendral vandhu theendum podhu " in the same movie.
    This song is far more even matching.
    Wonderful observation, as usual with a great social value .
    One more very precise observation which I liked is , about the matching of voices as made by Ayya Mathimaaran ( Anna)
    👌👌👌👌👌

  • @vivekmad2010
    @vivekmad2010 2 ปีที่แล้ว +3

    வட மாவட்டங்களில் "அண்ணே" கிடையாது..."அண்ணா" தான்....@5.04 இந்த இடத்தில் "அண்ணே"... என்று சொல்கிறார், தன்னையும் அறியாமல் மதுரை தமிழில் பேசியிருப்பரோ..?

  • @mhvansales8304
    @mhvansales8304 2 ปีที่แล้ว +1

    I feel the same Nasar and ilayaraja!

  • @rohith22987
    @rohith22987 2 ปีที่แล้ว +7

    தாங்கள் மெல்லிசை மன்னரை பேட்டி எடுத்ததை பற்றி கூறியுள்ளீர்கள். எப்படியாவது இளையராஜாவை பேட்டி எடுத்து காணொளியை பதிவிடுங்கள். அது தான் இளையராஜாவிற்கு சரியான பெருமை சேர்க்கும்.

  • @tamilselvansuthan4915
    @tamilselvansuthan4915 2 ปีที่แล้ว +1

    எம்.எஸ்.வி. க்கு பிறகு அதே மெருகில் இளையராஜா வுக்குத்தான் சிறப்பு விமர்சனம் அமைந்துள்ளது.

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 2 ปีที่แล้ว +1

    Super sir. நல்ல analysement

  • @vivekmad2010
    @vivekmad2010 2 ปีที่แล้ว +2

    ஸென்னை அல்ல சென்னை....

  • @iAmuthan
    @iAmuthan 2 ปีที่แล้ว +6

    தோழர் நீங்க அண்ணாமலையே கலாய்க்கிறீங்க தானே

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 ปีที่แล้ว +3

    T.m.s.குரல் ஜெய்சங்கர் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் வெகு பொருத்தமாக இருக்கும்

  • @vivekmad2010
    @vivekmad2010 2 ปีที่แล้ว +1

    BB Srinivas alla PB Srinivas... SBB என்று சொல்லாமல் SPB என்று சொன்னதுபோல் BB Srinivas என்று சொல்லாமல் PB Srinivas என்று சொல்லவேண்டும்...

  • @vivekmad2010
    @vivekmad2010 2 ปีที่แล้ว

    TMS, நாகேஷ்க்கு கூட பாடியிருக்கிறார்....

  • @kircyclone
    @kircyclone 2 ปีที่แล้ว

    குரல்கள் கதாநாயகனுக்கு பொருத்தம் பார்க்கடுவது இல்லை ... கதா பாத்திரத்துக்கு தான் பொருத்தம் பார்க்கப்படுகிறது... காதானாயகர்களை களாய்க்கனும் என்ற உங்க ஆசை நேர்மையை overtake பண்ணிகிட்டு போகுது... பார்த்து...

  • @kmlb3382
    @kmlb3382 2 ปีที่แล้ว

    Poda echa