கவிஞர் மாயவனாதனின் இந்தப் பாடல்களை தேடி தேடி கேட்டு மகிழ்ந்ததொரு காலம் - Mayavanathan Rare Hit Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • கவிஞர் மாயவனாதனின்
    அரிதான பாடல்கள் - 1
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF Vembar Manivannan PAZHAIYA PAATTU PUTHAKAM Channel
    --
    FOLLOW US ON FACEBOOK
    www.facebook.c...
    FOLLOW US ON TH-cam
    / பழையபாட்டுபுத்தகம்
    "பழமை காப்போம்"

ความคิดเห็น • 369

  • @snagarajsnagaraj4069
    @snagarajsnagaraj4069 หลายเดือนก่อน +21

    இந்த அற்புதமான பாடல்களை எழுதியவர் இவரா அற்புதம் அருமை அருமை இதை வெளியிட்டவருக்கு கோடான கோடி நன்றி

  • @RaviChandran-jj8er
    @RaviChandran-jj8er หลายเดือนก่อน +6

    தென்றல் தீண்டும் தென்காசி
    அழகான மலர்கள் ஆடாட்டுமே பாடட்டுமே
    இனித்தது பிடித்தது

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 4 หลายเดือนก่อน +59

    ஏனோ சிறுவயது ஞாபகம் வருகிறது. மனம் கனத்து கண்கள் கசிந்தன. மறந்த கவிஞர் மாயவநாதன் அவர்களது பாடல்களை நினைவூட்டிய அன்பு நெஞ்சத்திற்கு வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி.

    • @natraj140
      @natraj140 2 หลายเดือนก่อน +4

      பாடல்கேட்டுமிகநாட்களாகிவிட்டது❤❤

    • @vasanthiselvaraj8708
      @vasanthiselvaraj8708 2 หลายเดือนก่อน

      🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🏿🙏🏿🙏🏿🥺

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 หลายเดือนก่อน +9

    தேனூறும் பொருனைத் திருநெல்வேலித் தீந்தமிழின் திகட்டாத பொதியமலை சுரக்கும் தமிழ்ச் சாறு கவிஞர் மாயவநாதனின் மண்ணாளும் பாடல்கள்.

  • @spy61
    @spy61 2 หลายเดือนก่อน +10

    அருமையான வரிகள்...
    இப்புவும் எழுதுறானுக.. நானும் பாடலாசிரியர்னு...
    கருமம்

  • @tamilvina6618
    @tamilvina6618 5 หลายเดือนก่อน +75

    அற்புத தமிழ் கவிஞர் மாயவநாதன் புகழ் நீடு வாழ்க

  • @bhavanivaikundam8537
    @bhavanivaikundam8537 4 หลายเดือนก่อน +60

    இந்த பாடல்கள் எல்லாம் கேட்டால் மலரும் நினைவுகள் வருகிறது olds is gold,, என்றும் இனிமை

  • @AsokkumarJesudasan
    @AsokkumarJesudasan หลายเดือนก่อน +11

    இவரையும் பட்டுக்கோட்டையாரையும் இழந்தது துரதிஷ்டமே. என்ன அழகான கவிதை

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul หลายเดือนก่อน +1

      தமிழ்த்தாய் மிகவும் துரதிர்ஷ்டசாலி. மூன்று கவிஞர்களை இளம் வயதிலேயே இழந்து விட்டாள்.
      ஃ பாரதியார்,
      ஃ பட்டுக்கோட்டை,
      ஃ மாயவநாதன்.

  • @parthasarathys1965
    @parthasarathys1965 5 หลายเดือนก่อน +53

    திறமையுள்ள.. கவிஞர்கள். சில. ஆண்டுகள்.. வாழ்ந்து.. இறைவடிவம்.. பெற்றது. வேதனை.. சோதனை..

    • @dillibaskaran8548
      @dillibaskaran8548 4 หลายเดือนก่อน +1

      Suppersong

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb หลายเดือนก่อน

      இறைவடிவம் என்றால் மகிழ வேண்டும். ஆனால் வேதனை என்கிறீர்கள். புரிதலில் பிழை திருத்திக் கொள்ளலாம்

  • @savithrim946
    @savithrim946 3 หลายเดือนก่อน +23

    நல்ல கவிஞர்கள் அனைவரும் நம் அனைத்து மக்களின் பொது சொத்துக்கள். 🙂

    • @natraj140
      @natraj140 2 หลายเดือนก่อน +1

      எத்தனைவருடங்கள்முன்புகேட்டது❤இனிமை❤இளமையானசாங்❤❤❤

  • @Ramalakshmi-r4s
    @Ramalakshmi-r4s 3 หลายเดือนก่อน +17

    🙏🙏🙏இத்தகைய அருமையான கவிஞருக்கு, கடவுள் நீண்ட ஆயுளைக் கொடுக்காமல் போய் விட்டார். என்றாலும் பாடல்கள் மூலமாக நம்முடனே வாழ்கின்றார். இப்படி ஒரு கவிஞர் இருந்தார் என்றே நிறைய பேருக்கு தெரியாமல் போய் விட்டது. எனக்கும் இப்போது தான் பதிவைப் பார்த்து தெரிந்து கொண்டேன். அரசு, சினிமா துறை இவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும்...... 🙏🙏🙏🙏🙏

  • @paulrajv3281
    @paulrajv3281 3 หลายเดือนก่อน +24

    பூலாங்குளம் வழியே நிறைய தடவைகள் பைக்கில் செல்லும் போதெல்லாம், மாயவநாதனின் ஊர் வழியே செல்கிறோம் என்ற ஒரு பெருமிதமான உணர்வு வருவதைத் தவிர்க்க முடியாது. என் நண்பர் கடல்மணி பக்கத்து ஊர்காரர் கூட.
    கல்லூரியில் படிக்கும்(1965)போது இவரைப் புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார். அது எவ்வளவு உண்மை என்பதை இப்பொழுது அவரது இனிய சந்தம் மிகுந்த பாட்டுக்களைக் கேட்கும் போது என் மனமும் பாராட்டித் கொண்டு வருகிறது.

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan 5 หลายเดือนก่อน +117

    *'பாலும் பழமும்'* திரைப் படத்தில் ஒரு பாடல்,
    *"பழுத்து விட்ட பழமல்ல நீ விழுவதற்கு*
    *பாய்ந்து விட்ட நதியல்ல நீ ஓய்வதற்கு*
    *எழுதிவிட்ட ஏடல்ல நீ முடிவதற்கு*
    *இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?''*
    வாழ்வின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைக்கும் அதே கணத்தில், சாவின் வாயிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க நேர்ந்து விட்ட ஓர் இளம் கதா பாத்திரத்தின் நிலையை, முதல் மூன்று வரிகளில் பெருஞ் சோகத்துடன் கூறிவிட்டு, நான்காவது வரியில் துணிவான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். *"இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?''* அற்ப ஆயுளில் ஒரு ஜீவனை முடித்து வைக்கும் விதியின் பிடரியில் அறையும் கேள்வி இது.
    *'என்னதான் முடிவு'* திரைப் படத்தில் மனதை உருகவைக்கும்
    *"பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே* - *செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே''*
    என்ற மிகச் சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார். நாத்திகவாதியின் மனதைக் கூட கரைய வைக்கும் உருக்கமான ஆன்மிக வரிகள் அவை. *'மகிழம்பூ'*(1969) படத்தில் *"தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே*- *செய்த தர்மம் தலைகாக்கும் மறக்காதே"* என்று தாராள உணர்வோடு தொடங்கி, *"இருக்கு இருக்கு என்று கொடுக்காதே*- *"பணம் இல்லாதக் காலத்தில் தவிக்காதே"* என்று அக்குணத்திற்கு தடை விதிக்கும் முரணான வரிகளோடும் ஒரு பாடலைத் தீட்டிய, தீந்தமிழ்க் கவிஞர் மாயவநாதன் ஆவார்.
    திரையிசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல்கள் தலைச் சிறந்தவை. இலக்கிய வகைகளில் இசைப் பாடலும் ஒருவகை. தமிழ் மரபில் இசைப் பாடல்கள் காலாவதியாகி விட்ட நிலையில், அதன் நீட்சியாக திரையிசைப் பாடல்கள் உருவானது. அந்த திரையிசைப் பாடல்களுக்கு இசையின்பத்தைத் தாண்டி, ஓர் இலக்கிய இன்பத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மாயவநாதன் என்பது மிகையில்லை.
    மாயவநாதன்
    1971ஆம் ஆண்டு *ஏப்ரல் திங்கள் 28* ஆம் நாள் காலமானார். *'டெல்லி டூ மெட்ராஸ்'*(1971) திரைப் படத்தின் பெயர்ப் பட்டியலில், மாயவநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அந்தக் கவிஞன் மீதிருந்த நன்மதிப்பை அப்படக் குழுவினர் வெளிப்படுத்தியிருந்தனர். இப்படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் மாயவநாதன் வரைந்திருந்தார். *"புன்னகையோ பூமழையோ*- *பொங்கி வரும் தாமரையோ"* என்றப் பாடலோடு, மலேசிய வாசுதேவனின் முதல் திரையுலகப் பாடல் என்று பதிவாகியிருக்கும், *"பாலு விக்கிற பத்துமா*- *உன் பாலு ரொம்ப சுத்தமா?"* ஆகியவை இப்படத்தில் புகழ் பெற்றன.
    *"தண்ணிலவு தேனிறைக்க , தாழை மரம் நீர் தெளிக்க"* பாடலை குளிர்ச்சியாக எழுதிய மாயவநாதன், கடைசியில் கடும் உச்சி வெயிலில் , கொடும் பசி மயக்கத்தில், நடு ரோட்டில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்து போனார் .
    *"என்றும் மேடு பள்ளம் நிறைந்தது தான் வாழ்க்கையென்பது"* என்று *"நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ"* ‘ பாடலில் ஒரு சரணத்தில் எழுதிய மாயவநாதன், அதேப் பாடலில் இன்னொரு சரணத்தின் கடைசி வரியில், *”விதி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது ?”* என்ற வினாவுடன் எழுதியிருந்தது அவர் வாழ்விலேயே மெய்யாகி விட்டது. *பத்தினிப் பாடலாசிரியர்* என்ற பெயரினைப் பெற்ற மாயவநாதன், *பட்டினிப் பாடலாசிரியர்* ஆனக் கதை துயரமானது.
    மேதாவிலாசத்துடன் பாடல்கள் புனைந்த மாயவநாதன், சொற்ப வாய்ப்புகளையும், அற்ப ஆயுளையும் பெற்றது தமிழ்ப் பாடலுலகின் துரதிருஷ்டம் என்று தான் கூற வேண்டியிருக்கிறது. பொய்யும், புரட்டும், போலி விளம்பரமும் மலிந்த சினிமா உலகில், சித்த நெறியும், சத்திய வெறியும் கொண்டு, ஞானச் சிறகடித்துப் பறந்த நூதனக் கவிஞன் **மாயவநாதன்** என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மாயவநாதன்
    *நினைவு நாள் ஏப்ரல் 28.*
    **நிறைவு!**

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 5 หลายเดือนก่อน +10

      @@BalanTamilNesan மிக்க நன்றி.உங்கள் தகவல்கள் முழுமையானது தினமணியில் 2021ல் ஒரு மாயவநாதன் பதிவு இன்று தான் பார்த்தேன் பூம்புகார் படத்தில் ஒரு பாடல்.புகழ் வெளிச்சம் படாமல் மறைந்த கவிஞர் மாயவநாதன் பதிவுக்கு நன்றி பாலன்

    • @BalanTamilNesan
      @BalanTamilNesan 5 หลายเดือนก่อน +6

      @@gnanakumaridavid1801 நன்றிங்க!

    • @saiprasath2647
      @saiprasath2647 4 หลายเดือนก่อน +8

      கண்கள் குளமானது, அந்த குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும்

    • @lalithavrajan352
      @lalithavrajan352 4 หลายเดือนก่อน +8

      இவ்வளவு அருமையான பாடல்களை எழுதிய கவிஞரை திரை உலகம் பட்டினியால் வாட செய்தது மிக மிக கொடுமை.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 4 หลายเดือนก่อน +6

      அன்று நம் மனதில் இடம் பிடித்த ஒரு கலிஞர்... அவர் பற்றிய சிறப்பான விளக்கமான பதிவு ... பாடல்களையும் விபரங்களையும் சொன்னதற்கு நன்றி.. ...

  • @NagalingamNataraj
    @NagalingamNataraj 4 หลายเดือนก่อน +58

    ஆஹா...தேடிப் பதிவிட்ட ரசனை காரருக்குநன்றி

  • @ilamparithi97
    @ilamparithi97 4 หลายเดือนก่อน +38

    கவிஞர் மாயவநாதனின் பாடலைப் பதிவு செய்தமைக்கு கோடானுகோடி நன்றி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 หลายเดือนก่อน +114

    கேட்டு கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல்கள் அனைத்தும் மறக்க முடியாத பாடல்கள். மாயவநாதன் மிக சிறந்த கவிஞர் கொஞ்சம் பாடல்களை எழுதியுள்ளப் போதிலும் அனைத்தும் மிக அருமையான பாடல்கள் .. இந்த இனிய தொகுப்புக்கு நன்றி மணிவண்ணன்

    • @BalanTamilNesan
      @BalanTamilNesan 5 หลายเดือนก่อน +7

      நன்று ஐயா. இன்னும் இவர் எழுதிய....
      இவளொரு அழகிய பூஞ்சிட்டு
      (காதல் படுத்தும் பாடு)
      என்ன கொடுப்பாய்
      (தொழிலாளி)
      தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே
      (மகிழம்பூ)
      போன்ற பாடல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா.
      வணக்கம், வாழ்த்து.

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 5 หลายเดือนก่อน +6

      @@BalanTamilNesan நன்றி பாலன்.இந்த பாடல்களும் இவர் எழுதியவை என்று இப்போது தான் தெரிகிறது இணையத்தில் இவரை பற்றிய தகவல்கள் மிக கொஞ்சமாக தான் காண கிடைக்கிறது

    • @jeyapalandavidpandiyaraj5550
      @jeyapalandavidpandiyaraj5550 5 หลายเดือนก่อน

      உண்மை ஐயா...​@@gnanakumaridavid1801

    • @keerthiarunachalam3544
      @keerthiarunachalam3544 4 หลายเดือนก่อน +4

      🎉​@@BalanTamilNesan

    • @sundrammm2663
      @sundrammm2663 4 หลายเดือนก่อน +8

      இந்த பாடல்திரைபடத்திலே வரவில்லை.

  • @nirmalacumarasamy6734
    @nirmalacumarasamy6734 หลายเดือนก่อน +7

    சிறந்த தொகுப்பு மேலும் பல பாடல்களை தாருங்கள் பாடலாசிரியர் கதை மனதை வருத்துகிறது

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 4 หลายเดือนก่อน +54

    இந்த மாபெரும் ஒப்பற்ற கவிஞர் திரு மாயவநாதன் பூலாங்குளம் தென்காசி மாவட்டம் தான் இவர் வேறு சமுதாயத்திலே பிறந்திருந்தால் பலப்பல சிறப்புகள் செய்திருப்பார்கள் பாவம் இங்கே இதுதான் நிலமை வாழ்க திரு மாயவநாதன் புகழ் வளர்க தமிழ்

    • @thangasamy7629
      @thangasamy7629 4 หลายเดือนก่อน +5

      ரெட்டியார்பட்டியில்(ஆலங்குளம் அருகில் )வசித்த காலம்சென்ற என் மாமனாருடன் படித்திருக்கிறார்.கவிஞர் பற்றி அவர் அடிக்கடி பேசுவார்.ஒரு வருத்தமான செய்தி,இவர் சென்னையில் கொலைசெய்யப்பட்டார். பூலங்குளத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • @tamilarasuarasu7280
      @tamilarasuarasu7280 4 หลายเดือนก่อน

      ​@@thangasamy7629
      கொலையா?

    • @tamilarasuarasu7280
      @tamilarasuarasu7280 4 หลายเดือนก่อน +1

      பாடலாசிரியர் என்ன சமூகம்?

    • @manicmanimani3746
      @manicmanimani3746 4 หลายเดือนก่อน +5

      மல்லிகை பூ போட்டு, ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான எழுத்து வரிகள் எனக்கு பிடித்த பாடல்,கவிஞர் கொலை செய்யப்பட்டார் என்று அவரது மருமகன் பதிவிட்டுள்ளார் யாம் அதிர்ச்சி அடைந்தோம் என்ன காரணம்

    • @thangasamy7629
      @thangasamy7629 4 หลายเดือนก่อน

      @@manicmanimani3746 அந்தக்காலத்தில் சினிமா பாட்டு எழுதுபவர்களுக்குள் போட்டியால் கொலை செய்யப்பட்டு அவர் உடல் சொந்த ஊர் கொண்டுவந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 2 หลายเดือนก่อน +10

    தேனில் தோய்த்த பலாச்சுளை போன்ற இனிமையான பாடல்கள்

  • @VaiythIlingam
    @VaiythIlingam 19 วันที่ผ่านมา +2

    என்ன.இனிமையான.பாடல்.இனிையோ.இனிமை.வாழ்த்துக்கள்.இதுபோல.இன்னும்.தாருங்கள்

  • @Loganathan-v9b
    @Loganathan-v9b หลายเดือนก่อน +6

    இந்த மாபெரும் கவிஞனை கொண்டாடதது யார் குற்றம் நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ❤❤❤❤❤❤❤

  • @balasundaram2491
    @balasundaram2491 3 หลายเดือนก่อน +20

    திரு.மாரயவநாதன் அவர்கள் ஓர் தன்மானம் மிக்க கவிஞர், அற்புதமான கவிதைகளைத் தந்தவர்,வாழ்க அவர் புகழ் 👍🙏

    • @samidosspaulraj5897
      @samidosspaulraj5897 3 หลายเดือนก่อน +2

      Kaatrodu kuzhal ada ada . This song is the first song ? How you missed it ?He was in Neyveli for some time.

  • @visuvasamsusaimariyan8277
    @visuvasamsusaimariyan8277 2 หลายเดือนก่อน +8

    தமிழுக்கு கிடைத்த பெரிய வரம் இந்த கவிஞன் மறுபடியும் பிறப்பாரோ?

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 หลายเดือนก่อน +6

    ❤❤❤அரிதான பாடல்கள், அருமையான பாடல்கள் மலரும் நினைவுகள்,மிகவும் நன்று

  • @PADMANABANTS
    @PADMANABANTS 3 หลายเดือนก่อน +19

    மாயவநாதன் பெயர் கேள்விப்பட்டதில்லை. இயல்பான பாடல்கள். அந்தக் காலத்து இசை எப்படி இருந்தது என்றும் அறிய முடிகிறது.

    • @manoharlal4834
      @manoharlal4834 2 หลายเดือนก่อน

      IN 60' S HE WAS WELL KNOWN KAVIGNAR

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 5 หลายเดือนก่อน +52

    தினந் தினமும் வானொலியைத்
    தேடித் தேடி அருகிருந்து
    கேட்டுக் கேட்டு இரசித்த காலம் இனிவருமோ
    இன்று நமது
    மனமுவந்த வணக்கத்தையும்
    நன்றியையும் வேம்பார்
    மணிவண்ணனுக்கு சொல்லி சொல்லி மகிழ்கின்றோம் , மேலும் மகிழ்வோம் !

  • @Palanisamy-c4h
    @Palanisamy-c4h 2 หลายเดือนก่อน +6

    Vembar manivannan ur old songs slected excellent.jp.

  • @VaithiyalingamKumar
    @VaithiyalingamKumar 3 หลายเดือนก่อน +8

    திங்களுக்கு என்ன இன்று திருமணமே இந்த பாடல் நான் சென்னை வானொலி நேயர் விருப்ப பகுதியில் கேட்டு ரசிதாத காலம். மலரும் நினைவுகலாக மனதில் பசுமையாக உள்ளன. ஆற்காடு குமார்...

  • @anuraju7114
    @anuraju7114 3 หลายเดือนก่อน +8

    அருமையான பாடல்கள்.சிறந்த கவிஞர்.பாடல்களை கேட்டவுடன் மனம் நிறைந்து.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 หลายเดือนก่อน +6

    Vembar அவர்களுக்கு நன்றி இவரை அறிய வைத்தமைக்கு

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 หลายเดือนก่อน +15

    அருமையான பாடல்கள்! மாயவநாதனின் கவிகள் எத்தனை அழகு! இவரைப்போல கவிகளை யாரும் எழுதலை ! எழுதவும் முடியாது ! அற்புதமான கவிஞர்!! இவரதுப்பாடல்களை தேடிப்பிடித்துக் கொடுத்ததுக்கு நன்றீ உங்களுக்கு! 👸❤❤❤❤💃

  • @muthammalrammohan9016
    @muthammalrammohan9016 5 หลายเดือนก่อน +26

    அருமையான பாடல்கள். அந்தநாளைய பாடல்கள் என்றுமே இனிமை தான்❤

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 5 หลายเดือนก่อน +19

    அற்புதமான பாடல் இயற்றிய
    திரு மாயவநாதன்
    இளம் வயதில் இறந்து விட்டார் என்று நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது
    பூலாங்குளம்
    நான் பார்த்த ஊர்

  • @sarojini763
    @sarojini763 5 หลายเดือนก่อน +32

    திங்களுக்கு என்ன இன்று திருமணமோ அழ்கான மலரோ விருப்பாடல்க்ள்

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 4 หลายเดือนก่อน +3

      திங்களுக்கு...

    • @goodies123100
      @goodies123100 4 หลายเดือนก่อน +3

      திங்கலுக்கு இல்லை சகோ திங்களுக்கு

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 หลายเดือนก่อน +2

      ஆமாம் சரோஜினிமா! 👸❤❤❤❤💃

    • @mahendrann2690
      @mahendrann2690 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 4 หลายเดือนก่อน +10

    🎉 வேம்பர் மணிவண்ணன் தொகுத்து வழங்குவது சிறப்பாக இறுக்கும்🎉 நன்றி திரு கவிஞர் மாயவநாதன் அவர்களுக்கும்🎉🎉🎉🎉🎉🎉🌈👍🌠🙋

  • @MenagaMenaga-e9y
    @MenagaMenaga-e9y 2 หลายเดือนก่อน +3

    அந்த திங்களும் உனக்கிட்ட பெயர் அல்லவோ. எத்தனை முறையும் கேட்டு ரசிக்கலாம். திவிட்டவே இல்லை. இனிமையான பாடல்...❤❤

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 5 หลายเดือนก่อน +21

    மேலும் முருகப்பெருமானை பற்றியபலபாடல்களையும்இயற்றி இருக்கிறார்அத்தனையும்அருமையாக இருக்கும்

  • @Sundar-vr6jq
    @Sundar-vr6jq 4 หลายเดือนก่อน +27

    கவிஞர் மாயவநாதன் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் இது அந்த சமுதாய மக்களுக்கே தெரியாது கவிஞர் பட்டுக்கோட்டையார் இணையாக பல பாடல்கள எழுதியவர் ஆனால் மறைக்கப்பட்ட கவிஞர் கலைஞர் அவர்களின் பூம்புகார் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் மாயவநாதன் ஆனால் புகழ் மறைக்கப்பட்டது அவருடைய தலைசிறந்த பாட்டாக கருதப்படுவது தப்பித்து வந்தானம்மா என்ற கேபிஎஸ் அம்மையார் பாடிய பாடல் இன்றுவரை சிலப்பதிகாரக் கதையை ஒரு பாடலில் முடித்து விடு

    • @mohankp2330
      @mohankp2330 20 วันที่ผ่านมา

      பணக்கார நாடார் இல்லாததால்.இவரைதெரியாது.ஜாதிக்கு

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 หลายเดือนก่อน +6

    இந்த மாதிரி அருமையான பாடல்களை பாடிய கவிஞர் இவர் என்பது இன்றுதான் தெரிந்தது, அருமையான வரிகள், சூப்பர், சூப்பர், இவரை தெரிந்து கொண்டது 👍🏻👌🏻

  • @hariharansr9074
    @hariharansr9074 4 วันที่ผ่านมา

    வணக்கம்
    அன்பு கவிஞர் மாயவ
    நாதனார்
    பொருணையை
    மகுடம் சூட்டிய
    தாமிரபரணிமண்ணைச்சேர்ந்தவரில்லையா!
    எத்தனைப் பாடல்கள்
    தேனமுதப் பாடல்களில் இசை
    யழகில் தித்திக்கும்
    பாடல்களைக் கேட்டுக்
    கொண்டேயிருக்கலாம்!
    வழங்கிய பாடல்களுக்கும்
    உங்களுக்கும்
    நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @mathibalanmaheswari3216
    @mathibalanmaheswari3216 4 หลายเดือนก่อน +14

    என்னுடைய சிறு வயது ஞாபகம் வருகிறது.

  • @balasundaram2491
    @balasundaram2491 หลายเดือนก่อน +2

    திரு மாயவநாதனின் பாடல்களைப் பற்றி எனது தம்பி சொல்லித் தான் தெரியும், ஆனால் இவ்வளவு பாடல்கள் உள்ளன என்று இப்போது நீங்கள் சொல்வது கண்டு, மகிழ்கிறேன்.

  • @balakumarvm531
    @balakumarvm531 5 หลายเดือนก่อน +19

    My High school days songs....These songs walked with me to school almost every alternate day....Those were the days when the RADIO ruled the roost.... from neighbourhood to tea shops, we had synched with these melodies.....

  • @pugalendhid8436
    @pugalendhid8436 3 หลายเดือนก่อน +4

    கலைஞரின் நண்பர்.

  • @rajendracholan2752
    @rajendracholan2752 5 หลายเดือนก่อน +17

    அவரது மிகச் சிறந்த படைப்பு
    இதழ் மொட்டு விரிந்திட...பந்த பாச படத்தில்..

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 5 หลายเดือนก่อน +4

      அதேபோன்று-
      இதயத்தில் நீ. ,படத்தில்
      சித்திரப் பூவிழி..வாசலில்
      பாடலை சொல்லலாம்

  • @rajanumapathy2098
    @rajanumapathy2098 5 หลายเดือนก่อน +26

    அருமையான பாடல்கள்..ஆழ்ந்த கருத்துக்கள்..மென்மையான உணர்வுகள்..இவை மாயவநாதன் கவிஞரின் மேன்மைகள்...பதிவுக்கு நன்றி...இதை பகிர்வதில் மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்

    • @rajanumapathy2098
      @rajanumapathy2098 5 หลายเดือนก่อน +2

      முதல் பாடல் ஏ.எல். ராகவன், எஸ்.ஜானகி பாடியது.

  • @nattamaiprabakaran1299
    @nattamaiprabakaran1299 3 หลายเดือนก่อน +6

    நாங்கள் இப்பாடல்கள் ஆனால் இப்பாட்டிற்கு தலைவன் யார் என்று தெரியவில்லை இப்பொழுது தான் முதல் முதலில் அவரைப் பற்றி தெரிந்து கொள்கின்றோம் அற்புதமான பாடல்கள் எழுதி இருக்கின்ற இவரை அநேக கோடி பேர்களுக்கு இது தெரியாமல் போனது எப்படியோ

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 4 หลายเดือนก่อน +15

    சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக

  • @indranivadivelu7402
    @indranivadivelu7402 2 หลายเดือนก่อน +4

    திகட்டாத பாடல்கள்.நன்றி.நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @ilankovan3771
    @ilankovan3771 3 หลายเดือนก่อน +4

    சித்தரை பூவிழி வாசலிலே பாடல் அருமை

  • @umasankarmoorthy1800
    @umasankarmoorthy1800 หลายเดือนก่อน +2

    மறக்கமுடியுமா படத்திலும் அவர்தான் பாடலாசிரியர், ஒரு பாடலுக்கு எழுத வேண்டும் அவர் வராததால் கலைஞர்தான் எழுதி கொடுத்தார். அந்த பாடல் “காகித ஓடம் கடலலை மீது…”

  • @yasminshahul4643
    @yasminshahul4643 5 หลายเดือนก่อน +15

    சூப்பர் பாடல் 👍
    அழகான மலரே அறிவான பொருளே ♥️

  • @rajendrans101
    @rajendrans101 4 หลายเดือนก่อน +11

    பாடல்கள் அத்தனையும் தேன். அதிலும் "சின்னச்சின்னக் கோவில்" என்ற பாடல் தேடிக் கொண்டிருந்த பாடல், தேவாம்ருதமாய் இனிக்கிறது. நன்றி ஐயா !

  • @subramanianavudainayagam7546
    @subramanianavudainayagam7546 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள்
    அருமையான இனிய பாடல்கள்.
    நன்றி
    தொடரட்டும் உங்கள் பணி

  • @VenkatachalmRathinam
    @VenkatachalmRathinam 4 หลายเดือนก่อน +13

    மாயவநாதன் பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை பாடல்களும் படத்தினுடைய பெயரும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @vishwkarmamatrimonysalem8112
    @vishwkarmamatrimonysalem8112 5 หลายเดือนก่อน +13

    இனிய கீதம் தானத்திற்கு நன்றி ஐயனே.... !

  • @vaseer453
    @vaseer453 4 หลายเดือนก่อน +9

    அன்று இலங்கை வானொலி மட்டும் இல்லாதிருந்தால் பல பழைய பாடல்களை கேட்கின்ற வாய்ப்பை இழந்திருப்போம். அதேபோல் இன்று வேம்பாரைப் போன்ற வெகு சிலர் மட்டும் இத்தகைய பாடல்களை 0:26 பதிவேற்றம் செய்து வராவிட்டால் பழைய பாடல்கள் என்ற சுவடே தெரியாமல் போயிருக்கும். அதிலும் வேம்பாரின் பணிக்கு ஈடே கிடையாது. பல அரிய பொக்கிஷங்களை நமக்கு வாரி வாரி வழங்குகிறார். அவருக்கு என்னுடைய மனம் கனிந்த நன்றி.
    💪Arm

  • @Loganathan-v9b
    @Loganathan-v9b 5 หลายเดือนก่อน +11

    தமிழ் திரைப்பட இலக்கிய நடை. உஙகளுக்கு நிகர் யார் ❤❤❤❤❤❤

  • @Vasukivaishu-s7x
    @Vasukivaishu-s7x 2 หลายเดือนก่อน +2

    பழைய பாடல்கள் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகள் ஒலி பரப்பாளர்களின் வாய்ஸ் இவை எல்லாவற்றையும் மனதில் வந்து போகிறது.

  • @neeldani7450
    @neeldani7450 15 วันที่ผ่านมา

    1) திங்களுக்கு என்ன இன்று திருமணமோ - பூஜைக்கு வந்த மலர் (1965) 0:00
    2) மல்லிகைப்பூ போட்டு கண்ணனுக்கு - தாலாட்டு (1969) 3:34
    3) அழகான மலரே அறிவான பொருளே - தென்றல் வீசும் (1962) 7:23
    4) சின்னச் சின்ன கோவில் - தாயின் கருணை (1965) 10:48
    5) முத்துநகைப் பெட்டகமோ - தெய்வீக உறவு (1968) 13:53

  • @sulochanaraghavi5654
    @sulochanaraghavi5654 4 หลายเดือนก่อน +11

    இனிமையான பாடல்கள் சூப்பரோ சூப்பர் நன்றி👌

  • @chandrashekaransubramanian2748
    @chandrashekaransubramanian2748 4 หลายเดือนก่อน +12

    அழகுக்கும் மலருக்கும் பாடலின் slow motion veraion😊 nice tune

    • @spy61
      @spy61 3 หลายเดือนก่อน +2

      கரெக்ட்... உண்மையை சொல்லப்போனால்...இந்த ஒரே ட்யூனை விஸ்வனாதன் ராமமூர்த்தி இரண்டு பட டைரக்டர்களிடமும் தவறாக கொடுத்துவிட்டதாக ஒரு செய்தி உண்டு..
      சிறு திருத்தங்களுடன் இரண்டு பாடல்களுமே ஏற்கப்பட்டன..
      இரண்டிலும் ஜானகி பாடனார்... இதில் AL ராகவன்... அந்த பாடலில் PBS....இரண்டுமே சூப்பர்

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 3 หลายเดือนก่อน

      ​@@spy61உண்மை..இந்த ஒற்றுமை ஜானகியால் சுட்டிக்காட்டப்பட்டதில் இது முன்பே படமாக்கப்பட்டிருந்தும் படத்திலிருந்து நீக்கப்பட்டது என்று ஒரு ரிப்போர்ட் உண்டு!

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 5 หลายเดือนก่อน +13

    அருமையான பாடல்களின் தொகுப்பு. நன்றி நன்றி ஐயா.

  • @subramaniselvamani5431
    @subramaniselvamani5431 2 หลายเดือนก่อน +4

    மனம் லேசானது நன்றி

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் வரிகள் 👌

  • @girijaashokkumar4790
    @girijaashokkumar4790 4 หลายเดือนก่อน +7

    பாலன் தமிழ் நேசன் அவர்களின் பதிவு மிக அருமை. மாயவநாதன்அவர்களைபற்றி நிறைய செய்திகள் அறிந்தேன், உண்மையில் மனம் மிக வேதனை உறுகிறது.

  • @PaakyaiNathanSpnathan
    @PaakyaiNathanSpnathan 4 หลายเดือนก่อน +7

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @ShanmugamShanmugam.A-j5w
    @ShanmugamShanmugam.A-j5w 2 หลายเดือนก่อน +2

    செண்பகபூ போட்டு பாடலை கேட்டு எனதுமகளுக்கு செண்பகம் என்று பெயர் வைத்தேன்

  • @arulzelian336
    @arulzelian336 3 หลายเดือนก่อน +15

    என்ன ஒரு அருமையான பாடல்கள், நல்ல கவிஞர், ஆனால், பலருக்கு இவரை
    பத்தி தெரியாது.

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 4 หลายเดือนก่อน +14

    திரைப்படத்தின் பெயர் மற்றும் பாடியவர்கள் பெயர் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அக்காலத்தில் வானொலியில் கேட்ட பாடல்கள்

  • @lrelangovan8924
    @lrelangovan8924 วันที่ผ่านมา

    அவர் முன்கோபக்காரர்....எளிதில் மற்றவர்களோடு ஒத்துப்போக மாட்டார்...அதனாலேயே சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 3 หลายเดือนก่อน +5

    Beautiful song Mr. Vembar Manivanan thanks for sharing 🎉❤

  • @natarajans152
    @natarajans152 4 หลายเดือนก่อน +7

    கவிங்கர்மaயவநாதன் padalgal என்றும் ம்மிக அருமை

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b 5 หลายเดือนก่อน +11

    நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🌹🌹👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌

  • @kumarelumalai7485
    @kumarelumalai7485 5 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு நன்றி

  • @udhayakumar2348
    @udhayakumar2348 15 วันที่ผ่านมา

    மாயவனாதன் அருமை

  • @sridevigoel3179
    @sridevigoel3179 หลายเดือนก่อน +1

    Great artist.. very little was known about him till I read the posts. very shocking to hear the tragic end of such a great lyricist. cruel World of filmdom..

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 3 หลายเดือนก่อน +5

    அருமை ❤❤

  • @panneerselvam4140
    @panneerselvam4140 19 วันที่ผ่านมา

    Mayavanathan is a great human resource singer ❤ God's gift in our TamilNadu.

  • @ChandraSarathy
    @ChandraSarathy 3 หลายเดือนก่อน +4

    All super good Songs Sir.❤

  • @lakshmin4167
    @lakshmin4167 4 หลายเดือนก่อน +12

    அருமையான பாடல்கள் தெளிவான குரலில் கேக்கும் போது இனிமையானதாக உள்ளது நன்றி

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 2 หลายเดือนก่อน +1

    சிறு வயதில் கேட்டப்பாடல்

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 27 วันที่ผ่านมา

    சிறு வயதில் கேட்ட பாடல்கள் ❤❤❤

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 5 หลายเดือนก่อน +10

    இதயத்தில் நீ. படித்தால் மட்டும் போதுமா சேர்க்க லாம்

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 2 หลายเดือนก่อน +1

    தேவரரசுக்கு தூதனுப்பி அவர் தேரையும் கேட்கட்டுமா... கண்ணதாசன் வரிகள் போலவே அருமையாக இருக்கிறது!

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 4 หลายเดือนก่อน +3

    அருமை, ஆசை, அற்புதம்,அமைதி, அப்பப்பா.

  • @shanmugam3991
    @shanmugam3991 4 หลายเดือนก่อน +4

    பல வருடங்களுக்கு முன்
    இலங்கை வானொலியில் கேட்டது.
    இக்கால இளைஞர்களிடம் திங்கள் என்று கேட்டல் அதுஒரு நாள் என்றுதான் சொல்லுவார்கள்.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln หลายเดือนก่อน

    கவிஞர் மாயவநாதன் அவர்களை மறைக்கப்பட்ட கவிஞராக ஏற்றுக்கொள்ளப்பட்ட தில் வருந்துகிறேன். நல்ல பாடல்களை எழுதியுள்ளார்கள்.அன்னாரது புகழ் வாழ்க.

  • @vijayand5678
    @vijayand5678 5 หลายเดือนก่อน +8

    மிக சிறப்பான பதிவு, மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @yogaraj2767
    @yogaraj2767 4 หลายเดือนก่อน +4

    அருமையான மெல்லிசை அழகான பாடல் வரிகள்
    அருமையாக பூமாலையாக தொகுத்து தந்ததற்கு நன்றி 🎉🎉🎉❤❤

  • @angappanviswasakthi1104
    @angappanviswasakthi1104 4 หลายเดือนก่อน +2

    பாடல்கள் மிக மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @tsynewsvelayutamtsy73
    @tsynewsvelayutamtsy73 4 หลายเดือนก่อน +4

    திங்கள் என்றால் சந்திரன் என்றும் அர்த்தம்.

  • @ravichandranm2848
    @ravichandranm2848 2 หลายเดือนก่อน +1

    I enjoyed these songs without seeing his photo the name i already knows Thak you🙏🙏🙏

  • @premkamaru2498
    @premkamaru2498 27 วันที่ผ่านมา

    Arumayana pathivu🎉🎉🎉

  • @sandrasanthanam2324
    @sandrasanthanam2324 2 หลายเดือนก่อน +3

    திரைப்படத்தின் பெயர்
    மற்றும் பாடியவர்
    யார் என்று தெரிந்தால்
    மிகவும் சிறப்பாக
    இருந்திருக்கும்
    அவர் மறைந்தாலும்
    அவர் குரல் இன்னும்
    கேட்டுகொண்டே
    இருக்கிறோமே
    அதுவே அவர் நினைவுகள்
    அழியாது

  • @SoniyaSoniya-sn9tx
    @SoniyaSoniya-sn9tx 3 หลายเดือนก่อน +1

    சுப்பார் 😊😊😊

  • @vincentdevadoss5665
    @vincentdevadoss5665 4 หลายเดือนก่อน +6

    Loveiy songs I like very much!

  • @rajapandianp4822
    @rajapandianp4822 2 หลายเดือนก่อน +1

    Inimaiyaga padukirarkal.athanal than intha paatuku perumai.

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 4 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤super

  • @nagendranc9897
    @nagendranc9897 4 หลายเดือนก่อน +6

    Super❤❤❤