குலதெய்வம் அருள் பெற எளிய முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • பலர் தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்
    பெண்களை தெய்வமாக வழிபடுவது பாரத தேசத்தில் பழங்காலம்தொட்டே இருந்துவரும் வழக்கம். அதிலும் சக்தி வழிபாடு என்பது தாய்வழி சமூகக் காலத்தில் இருந்தே நம்மிடம் இருந்துவருகிறது. அன்னை பராசக்தியின் கன்னி வடிவமான சப்த கன்னியர் வழிபாடு என்பது பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது
    அநேக இடங்களில் 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு படையல் வைப்பதையும் பார்த்து இருப்பீர்கள். அவை யாவுமே `சப்த மாதாக்கள்’ எனப்படும் சப்த கன்னியர் வழிபாடுதான்.
    பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி எனப் பெயர் கொண்ட சப்த மாதாக்கள் நம்முடைய எல்லா வேண்டுதல்களையும் விருப்பங்களையும் இன்றும் நிறைவேற்றிவருகிறார்கள். சக்தியின் அம்சமாக இவர்கள் தோன்றியதன் காரணம் என்ன, இவர்களின் சிறப்புகள் என்னென்ன என்பதை இங்கே காண்போம்.
    பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் வேண்டி வாங்கினார்கள் சண்ட முண்டர் எனும் இரு அரக்கர்கள். பெண் என்றால் அவர்களுக்கு அத்தனை இளக்காரம் போலும். ஒரு பெண்ணா நம்மை கொல்லப்போகிறாள் என்ற தைரியத்தில் அவர்கள் எல்லோரையும் கொடுமை செய்தார்கள். அன்னை ஆதிசக்தியின் அருளைப் பெற்ற காத்தியாயன முனிவரையே கொடுமை செய்யத் துணிந்த நிலையில், பராசக்தி கொதித்தெழுந்து அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள். அப்போது அசுரக் கூட்டத்தை ஒழிக்க தன்னிலிருந்து ஏழு கன்னியர்களை உருவாக்கினாள். சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவாகிய ஏழு கன்னியர்கள் அசுரக்கூட்டத்தை அழித்து, அன்னை பராசக்தியின் ஆசியைப் பெற்றனர்.
    பூவுலகில் இந்த சப்த மாதாக்களும் மக்களை காக்குமாறு சிவபெருமானால் பணிக்கப்பட்டு, அவரின் அம்சமான வீரபத்திரரின் துணையோடு அருள்புரியத் தொடங்கினர். சிவாலயத்தில் பெரும்பாலும் இவர்கள் ஏழு பேரின் சிலைகளைக் காணலாம். ஆலயங்கள் மட்டுமல்ல, ஆற்றங்கரையோரம், ஏரி, குளம், ஊரின் எல்லைகள் என எங்கேயும் இவர்களின் சிலைகள் வழிபடும்விதமாக இருந்து வருகின்றன. ரிக் வேதம், மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோத்தர புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் கன்னிமார்களின் விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
    சப்தமாதர்களுக்கு என தனிக்கோயில் இல்லை. அதேசமயம் சோழப் பேரரசு காலத்தில் ஆலயங்களில் சப்த மாதர்களுக்கு சந்நிதி எழுப்பப்பட்டு வழிபடுவது தொடங்கியது. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
    ஏழு தெய்வங்களும் ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அசுரர்களை அழித்தவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    வழிபாடுகளில் சிவா, விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களில் சக்தி வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. அந்தகாசுரன் எனும் அரக்கனிடம் இருந்து எண்ணற்ற அரக்கர்கள் வெளிப்பட்டு உலகை உண்டு இல்லையென்று இம்சை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அதன் பொருட்டு, அவர்களை அழிப்பதற்காகவே யோகேஸ்வரி எனும் சக்தியை தோற்றுவித்தார். அவள், மகேஸ்வரி எனும் சக்தியை உண்டுபண்ணினார். பிரம்மதேவர் உருவாக்கிய சக்தியை, பிராம்மி எனப் போற்றுகிறது புராணம். மகாவிஷ்ணு, நாராயணி எனும் சக்தியைப் படைத்தார். முருகப்பெருமான் கெளமாரியை தோற்றுவித்தார் (முருக வழிபாட்டுக்கு கெளமார வழிபாடு என்றே பெயர்). ஸ்ரீவராக மூர்த்தி வராகியையும் இந்திரன் இந்திராணியையும் தோற்றுவித்தார்கள். யமதருமன் சாமுண்டி தேவியைத் தோற்றுவித்தார்கள் என்றும் புராணம் விவரிக்கிறது.
    அந்தகாசுரனை அழிக்கும் பொருட்டு தோன்றியவர்களே சப்த கன்னியர் என்றும் சும்பநிசும்ப அசுர சகோதரர்களை அழித்தொழிப்பதற்காக அவதாரம் எடுத்தவர்கள் சப்தகன்னியர் என்றும் பரமேஸ்வரனின் பணிப்பெண்களாக இருந்தவர்களே சப்தகன்னியர் என்றும் புராணங்கள் விளக்குகின்றன.
    சப்த கன்னியர் என்றும் சப்த மாதர்கள் என்றும் போற்றப்படுகிற ஏழு தெய்வங்களையும் சக்தியின் இருப்பிடமாகவே வணங்குகிறார்கள் பக்தர்கள். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது என்றும் குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவுமான படையல் போடுகிற பூஜையாகவும் சப்த கன்னியர் வழிபாட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
    . மகேஸ்வரி என்பவள், சிவாலயங்களில் உள்ள அம்பாள் அம்சம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    சப்த மாதர்களை எந்நாளும் வணங்கி நலமும் வளமும் பெறுவோம்.
    விதை நெல் வைத்து சப்த கன்னியரை வழிபடும் முறை இன்றைக்கும் கிராமங்களில் மிக முக்கியமான பூஜையாக அமைந்திருக்கிறது. சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்
    அருள்மிகு ஏரிக்கரை கன்னியம்மன் கோவில் கோவிந்தவாடி அகரம்
    #ஏரிக்கரைகன்னியம்மன்கோவில் #கோவிந்தவாடிஅகரம்
    #ஏரிக்கரைகன்னியம்மன்
    #கோவிந்தவாடிகன்னியம்மன்
    #மணபாக்கம்கன்னியம்மன்
    #சப்தகன்னியர் #சப்தமாதர் #பிராம்மி #மகேஸ்வரி #கௌமாரி #வைஷ்ணவி #வராகி #இந்திராணி #சாமுண்டீஸ்வரி #ஐந்தொழில்கள் #சிவசக்தி #சப்தகன்னியர் #சப்தமாதாக்கள் #சப்தமாத்திரிகைக்கள் #சப்தமாதா #ஏழுகன்னியர்கள் #குலதெய்வம் #சிவபெருமான் #கருவில்உருவாகாதபெண் #மகிசாசுரன் #கொலைப்பாவம் #கோலியனூர் #வீரபத்திரன் #தட்சிணாமூர்த்தி #பம்பைஉடுக்கை #சப்தகன்னிஅம்மன்அழைப்பு #கன்னியம்மன்வர்ணிப்பு #சப்தகன்னிபெயர்கள் #கன்னியம்மன் #மனபாக்கம் #கன்னியம்மா #AthmaGnanaMaiyam #சாம்பிராணிவாசனை #சாம்பிராணி #sambranivasanai #sambrani

ความคิดเห็น • 1

  • @karunakarankrishnan447
    @karunakarankrishnan447 2 หลายเดือนก่อน +1

    சப்த கன்னிகள் பெயருக்கு பதிலாக சப்த மாதாக்கள் பெயரை சொல்கின்றனர், 😢, கன்னிகள் பெயர் பட்டாரிகா, தேவ கன்னி,பத்ம கன்னி, சிந்து கன்னி, அகஜ கன்னி, வனகன்னி, சுக்சும கன்னி