கடவுள் மனிதர்களுக்கென வகுத்துவைத்த சட்டங்கள் ஆதாம் முதல் இன்றுவரை தொடருகிறது. குறிப்பாக, கடவுளை முழுமையாக நேசிப்பதும் தன்னையும் பிறனையும் நேசிப்பதும் உட்பட. இயேசு கூறியதைக் கவனியுங்கள்: மத்தேயு 5 : 17 திருச்சட்டத்தையோ தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையோ அழிக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; அழிக்க அல்ல, அதையெல்லாம் நிறைவேற்றவே வந்தேன். 18 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வானமும் பூமியும் அழிந்துபோனாலும் திருச்சட்டத்தில் இருக்கிற ஒரு சின்ன எழுத்துகூட அழிந்துபோகாது, சொல்லப்போனால் ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட அழிந்துபோகாது; அதில் எழுதப்பட்டிருக்கிற எல்லாமே நிறைவேறும். 19 அதனால், திருச்சட்டத்திலுள்ள ஒரு சின்ன கட்டளையைக்கூட ஒருவன் மீறினால், அதுவும் அப்படி மீறும்படி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் அவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெற மாட்டான். ஆனால், அதிலுள்ள கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெறுவான்...... மோசே மூலம் கடவுள் கொடுத்த மேலதிக சட்டங்கள் இயேசுவின் பலியின் பின்னர் முடிவுக்கு வந்தாலும் அடிப்படைச் சட்டங்கள் மாற்றப்படவில்லை என்பதை பைபிள் வலியுறுத்துகிறது. பழைய ஏற்பாட்டின் மறு சீரமைப்பே புதிய ஏற்பாடு என்பதால் பூமிக்கான கடவுளின் நோக்கம் மாற்றமடையவில்லை. எனவேதான், பைபிளின் 66 புத்தகங்களும் கடவுளின் அரசாங்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதையே இயேசு மத்தேயு 6 : 9, 10ல் போதித்தார். மேலும், மத்தேயு 24 : 14ல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்... என்றார். அதாம் கடவுளின் கட்டளையை மீறாதிருந்தால் இறந்திருக்கவும் மாட்டான், பூமியோ ஏதேன் தோட்டத்தைப் போன்று மாறியிருக்கும்; மரணம் பூமியில் இருந்திருக்காது. இவை மதப்பிரசங்கத்தைக் குறிப்பதில்லை!
Praise the lord amma. A men.
Amen❤
Amen amen appa 🙏
Praise the lord
கடவுள் மனிதர்களுக்கென வகுத்துவைத்த சட்டங்கள் ஆதாம் முதல் இன்றுவரை
தொடருகிறது. குறிப்பாக, கடவுளை முழுமையாக நேசிப்பதும் தன்னையும்
பிறனையும் நேசிப்பதும் உட்பட. இயேசு கூறியதைக் கவனியுங்கள்:
மத்தேயு 5 : 17 திருச்சட்டத்தையோ தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையோ அழிக்க
வந்தேன் என்று நினைக்காதீர்கள்; அழிக்க அல்ல, அதையெல்லாம் நிறைவேற்றவே
வந்தேன். 18 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வானமும் பூமியும் அழிந்துபோனாலும் திருச்சட்டத்தில் இருக்கிற ஒரு சின்ன எழுத்துகூட அழிந்துபோகாது, சொல்லப்போனால் ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட அழிந்துபோகாது; அதில் எழுதப்பட்டிருக்கிற எல்லாமே நிறைவேறும். 19 அதனால், திருச்சட்டத்திலுள்ள ஒரு
சின்ன கட்டளையைக்கூட ஒருவன் மீறினால், அதுவும் அப்படி மீறும்படி
மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் அவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி
பெற மாட்டான். ஆனால், அதிலுள்ள கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி
பெறுவான்......
மோசே மூலம் கடவுள் கொடுத்த மேலதிக சட்டங்கள் இயேசுவின் பலியின் பின்னர்
முடிவுக்கு வந்தாலும் அடிப்படைச் சட்டங்கள் மாற்றப்படவில்லை என்பதை பைபிள் வலியுறுத்துகிறது. பழைய ஏற்பாட்டின் மறு சீரமைப்பே புதிய ஏற்பாடு என்பதால்
பூமிக்கான கடவுளின் நோக்கம் மாற்றமடையவில்லை. எனவேதான், பைபிளின்
66 புத்தகங்களும் கடவுளின் அரசாங்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
அதையே இயேசு மத்தேயு 6 : 9, 10ல் போதித்தார். மேலும், மத்தேயு 24 : 14ல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்... என்றார்.
அதாம் கடவுளின் கட்டளையை மீறாதிருந்தால் இறந்திருக்கவும் மாட்டான், பூமியோ
ஏதேன் தோட்டத்தைப் போன்று மாறியிருக்கும்; மரணம் பூமியில் இருந்திருக்காது.
இவை மதப்பிரசங்கத்தைக் குறிப்பதில்லை!
Thank you Jesus
Praise the lord 🙏🙏🙏