ஞாயிறு திருப்பலி பாடல்கள் - Sunday's Mass  Songs
ஞாயிறு திருப்பலி பாடல்கள் - Sunday's Mass  Songs
  • 59
  • 175 743
🔴30-06-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 13ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
#30 #ஜூன் #2024, ஞாயிறு
பொதுக்காலம் 13ஆம் வாரம் - ஞாயிறு
முதல் வாசகம்
அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24
சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.
கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி
4
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5
அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி
10
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி
இரண்டாம் வாசகம்
இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 7, 9, 13-15
சகோதரர் சகோதரிகளே,
நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.
மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். “மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை” என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43
அக்காலத்தில்
இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.
அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள்.
ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.
มุมมอง: 169

วีดีโอ

🔴23-06-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 12ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 1592 หลายเดือนก่อน
#23 #ஜூன் 2024, ஞாயிறு பொதுக்காலம் 12ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க! யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 8-11 ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்: “கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடிய பொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதி துணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி ‘இதுவர...
🔴16-06-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 11ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 992 หลายเดือนก่อน
#16 #ஜூன் #2024, ஞாயிறு பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 17: 22-24 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நான் நடுவேன். இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன்....
🔴19-05-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // தூய ஆவி ஞாயிறு // Sunday's Holy Mass songs
มุมมอง 1533 หลายเดือนก่อน
#19 #மே 2024, #ஞாயிறு தூய ஆவி ஞாயிறு பெருவிழாத் திருப்பலி பெருவிழா தூய ஆவி ஞாயிறுக்குப் பின் வரும் திங்கள் கிழமையிலும், இன்னும் செவ்வாய்க் கிழமையிலும் கூட, எங்கெல்லாம் இறைமக்கள் திரளாகத் திருப்பலிக்கு வரவேண்டுமோ, அல்லது வருவது வழக்கமோ, அங்கெல்லாம் தூய ஆவி விழாத் திருப்பலி வாசகங்களை மீண்டும் பயன்படுத்தலாம். அல்லது உறுதிப்பூசுதல் அளிக்கும் சடங்கு முறையிலுள்ள வாசகங்களைப் பயன்படுத்தலாம். முதல் வாசக...
🔴27-03-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l தவக்காலம் இந்தாம் வாரம் l Sunday's Holy Mass songs Tamil
มุมมอง 1305 หลายเดือนก่อน
🔴27-03-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l தவக்காலம் இந்தாம் வாரம் l Sunday's Holy Mass songs Tamil
🔴10-03-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l தவக்காலம் நான்காம் வாரம் l Sunday's Holy Mass songs Tamil
มุมมอง 1065 หลายเดือนก่อน
🔴10-03-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l தவக்காலம் நான்காம் வாரம் l Sunday's Holy Mass songs Tamil
☦️பெரிய வியாழன் திருப்பலி பாடல்கள் /🍇🍞புனித வியாழன் l Maundy Thursday Mass Songs in Tamil
มุมมอง 7945 หลายเดือนก่อน
☦️பெரிய வியாழன் திருப்பலி பாடல்கள் /🍇🍞புனித வியாழன் l Maundy Thursday Mass Songs in Tamil
☦️ புதிய குருத்து ஞாயிறு பவனி & திருப்பலி பாடல்கள் 🌴 Palm Sunday Mass songs Tamil lyrics
มุมมอง 8085 หลายเดือนก่อน
☦️ புதிய குருத்து ஞாயிறு பவனி & திருப்பலி பாடல்கள் 🌴 Palm Sunday Mass songs Tamil lyrics
🔴03-03-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l தவக்காலம் மூன்றாம் வாரம் l Sunday's Holy Mass songs Tamil
มุมมอง 1316 หลายเดือนก่อน
🔴03-03-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l தவக்காலம் மூன்றாம் வாரம் l Sunday's Holy Mass songs Tamil
☦️புனித வெள்ளி திருப்பலி பாடல்கள் ✝️🔨🩸பெரிய வெள்ளி l Good Friday Mass Songs in Tamil
มุมมอง 1.6K6 หลายเดือนก่อน
☦️புனித வெள்ளி திருப்பலி பாடல்கள் ✝️🔨🩸பெரிய வெள்ளி l Good Friday Mass Songs in Tamil
🌖ஈஸ்டர் பாடல்கள்/உயிர்ப்பு/பாஸ்கா பெருவிழா திருப்பலி பாடல்கள் Easter Mass Songs in Tamil
มุมมอง 8496 หลายเดือนก่อน
🌖ஈஸ்டர் பாடல்கள்/உயிர்ப்பு/பாஸ்கா பெருவிழா திருப்பலி பாடல்கள் Easter Mass Songs in Tamil
🔴25-02-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l தவக்காலம் இரண்டாம் வாரம் l Sunday's Holy Mass songs Tamil
มุมมอง 1356 หลายเดือนก่อน
🔴25-02-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l தவக்காலம் இரண்டாம் வாரம் l Sunday's Holy Mass songs Tamil
🔴18-02-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l தவக்காலம் முதல் வாரம் l Sunday's Holy Mass songs Tamil
มุมมอง 2636 หลายเดือนก่อน
#18 #பிப்ரவரி 2024, ஞாயிறு தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை. தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15 கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: “இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்கள...
☦️ திருநீற்று புதன் / சாம்பல் புதன் திருப்பலி பாடல்கள் l Ash Wednesday Lent songs with lyrics
มุมมอง 2.5K6 หลายเดือนก่อน
#14 #பிப்ரவரி 2024, புதன் திருநீற்றுப் புதன் முதல் வாசகம் நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவ...
🔴15-01-2024 தைத்திருநாள் பொங்கல் திருநாள் திருப்பலி பாடல்கள் l Pongal Holy Mass songs
มุมมอง 2287 หลายเดือนก่อน
#15 #சனவரி 2024, திங்கள் பொதுக்காலம் 2ஆம் வாரம் - திங்கள் முதல் வாசகம் கீழ்ப்படிதலே பலிகளை விடச் சிறந்தது. சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23 அந்நாள்களில் சாமுவேல் சவுலை நோக்கி, “நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்” என, சவுல், “சொல்லுங்கள்” என்றார். சாமுவேல் கூறியது: “நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்த போதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்?...
🔴07-01-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா l Sunday's Holy Mass songs
มุมมอง 7687 หลายเดือนก่อน
🔴07-01-2024 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா l Sunday's Holy Mass songs
🔴31-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // யேசு மரி சூசை திருக்குடும்பம்// Sunday's Holy Mass songs
มุมมอง 2057 หลายเดือนก่อน
🔴31-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // யேசு மரி சூசை திருக்குடும்பம்// Sunday's Holy Mass songs
🔴24-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // திருவருகைக்காலம் 4ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 2228 หลายเดือนก่อน
🔴24-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // திருவருகைக்காலம் 4ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
🔴17-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // திருவருகைக்காலம் 3ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 3198 หลายเดือนก่อน
🔴17-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // திருவருகைக்காலம் 3ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
🌠 புத்தாண்டு 2024 திருப்பலி பாடல்கள் // New Year Mass songs in Tamil lyrics
มุมมอง 5K8 หลายเดือนก่อน
🌠 புத்தாண்டு 2024 திருப்பலி பாடல்கள் // New Year Mass songs in Tamil lyrics
🔴10-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // திருவருகைக்காலம் 2ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 3408 หลายเดือนก่อน
🔴10-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // திருவருகைக்காலம் 2ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
🌠🚼கிறிஸ்துமஸ் 2023 திருப்பலி & நடன பாடல்கள் // Christmas Mass songs in Tamil lyrics
มุมมอง 2.1K8 หลายเดือนก่อน
🌠🚼கிறிஸ்துமஸ் 2023 திருப்பலி & நடன பாடல்கள் // Christmas Mass songs in Tamil lyrics
🔴03-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // திருவருகைக்காலம் முதல் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 1.4K8 หลายเดือนก่อน
🔴03-12-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // திருவருகைக்காலம் முதல் வாரம் // Sunday's Holy Mass songs
புனித சிசிலியா பாடல்கள் // Saint Cecilia Songs in tamil with lyrics
มุมมอง 9529 หลายเดือนก่อน
புனித சிசிலியா பாடல்கள் // Saint Cecilia Songs in tamil with lyrics
🔴26/11/2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா l Holy Mass song
มุมมอง 2.8K9 หลายเดือนก่อน
🔴26/11/2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் l இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா l Holy Mass song
🔴19-11-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 33ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 2759 หลายเดือนก่อน
🔴19-11-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 33ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
🔴12-11-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 32ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 4469 หลายเดือนก่อน
🔴12-11-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 32ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
🔴05-11-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 31ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 5689 หลายเดือนก่อน
🔴05-11-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 31ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
🔴29-10-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 30ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
มุมมอง 4199 หลายเดือนก่อน
🔴29-10-2023 ஞாயிறு திருப்பலி பாடல்கள் // பொதுக்காலம் 30ஆம் வாரம் // Sunday's Holy Mass songs
November 02 // அனைத்து இறந்த ஆன்மாக்கள் நாள் திருப்பலி பாடல்கள் // Catholic Mass songs
มุมมอง 2.6K10 หลายเดือนก่อน
November 02 // அனைத்து இறந்த ஆன்மாக்கள் நாள் திருப்பலி பாடல்கள் // Catholic Mass songs

ความคิดเห็น

  • @antolinora5240
    @antolinora5240 หลายเดือนก่อน

    அம்மா மரியே எங்கள் வாழ்வில் இருக்கும் துன்பமுடிச்சியை அருத்தருலும் அம்மா மரியே

  • @antonycarrol6901
    @antonycarrol6901 3 หลายเดือนก่อน

    🙏🕯️🕊️🕯️🙏

  • @inigoraj8358
    @inigoraj8358 4 หลายเดือนก่อน

    அருமையான அர்த்தமுள்ள வரிகள். Fr. George victor. அவர்களுக்கு. மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்

  • @user-tu9pd8ub4r
    @user-tu9pd8ub4r 5 หลายเดือนก่อน

    ❤😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉நீங்கள் கிறிஸ்து பாடடை போட்டதர்காக நன்றி

  • @ShanthiIrine-dz3xd
    @ShanthiIrine-dz3xd 5 หลายเดือนก่อน

    Mother Mary pl helf me

  • @johnpeterpeter7358
    @johnpeterpeter7358 5 หลายเดือนก่อน

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 6 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @nathannathan8347
    @nathannathan8347 6 หลายเดือนก่อน

    Hi sir hope you Good please send like this sunday mass songs monday or tuesday that is better know sir thank you

  • @janravi2022
    @janravi2022 6 หลายเดือนก่อน

    அனைத்து பாடல்களும் அருமை 👍👍 வாழ்த்துக்கள் 💐💐 நன்றி

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 7 หลายเดือนก่อน

    Thunba mudichukalai avizkum annaiye pls bless my and my sister family vathsala grandson vai pesa vendikollum iam hindu

  • @uthayanmm
    @uthayanmm 7 หลายเดือนก่อน

    புதிய நல் ஆண்டும் புலர்ந்தது புதுவாழ்வும் விடிந்தது. இயேசுவின் வருகையால் காரிருள் நீங்கி நம் வாழ்வும் சிறந்தது - 2 அவரை புகழ்ந்து பாடிடுவோம் என்றும் நமது வழ்வினிலே பகிர்ந்தே நாமும் மகிழ்ந்திடுவோம் பிறர்க்காசீர் வழங்கிடுவோம் (புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ) 2 புதிய நல் ஆண்டும் 1. வாழ்வினில் வருவதை நம்பிக்கையோடு நாமும் ஏற்றிடுவோம் தருவது யாவையும் நன்றியோடு நாளும் பெற்றிடுவோம் -2 நடந்ததை மறந்து நடப்பதை தினமாய் என்றும் நம்பிடுவோம் மனதினில் உறுதியை இழந்துவிடாமல் வாழ்வினில் பயணிப்போம் இயேசுவின் கரம் கொண்டு இனிதே செயற்படுவோம் புத்தாண்டில் மகிழ்வாய் வாழ்ந்தே வளர்த்திடுவோம் (புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ) 2 புதிய நல் ஆண்டும் 2. தளர்ந்திடும்போது தாயாய் நம்மை தாங்கியே தேற்றிடுவார் வருந்திடும்போது தந்தையாய் நம்மை தோளில் சுமந்திடுவார் -2 தனிமையில் உற்ற தோழனாய் நமக்கு ஊக்கம் தந்திடுவார் எதிலும் என்றும் கலங்கவிடாமல் அவரே காத்திடுவார் நன்மைகள் செய்வதை கொள்கையாய் கொண்டிடுவோம் என்றும் நலமுடன் வாழவே நாளும் முயன்றிடுவோம் (புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ) 2 புதிய நல் ஆண்டும்

  • @josephinelouis4442
    @josephinelouis4442 8 หลายเดือนก่อน

    Amen Alleluia 🙏🙏🙏

  • @abjabj1805
    @abjabj1805 8 หลายเดือนก่อน

    Maria vazka

  • @michealammalf9504
    @michealammalf9504 8 หลายเดือนก่อน

    துன்ப முடிச்சுகளை அவிழ்த்து அருளும் அம்மா.

  • @user-zp2dt2ug7l
    @user-zp2dt2ug7l 8 หลายเดือนก่อน

    🙏❤🌹💕ஆமே ன் தா 🙏யே

  • @kumarfathima7262
    @kumarfathima7262 8 หลายเดือนก่อน

    அம்மா எங்க குடும்பத்துல உள்ள முடிச்சை அவிழ்த்து போடும் அன்னையை நோய் நொடி இல்லாம காத்தருளும் மாதா அம்மா

  • @ThangarajBabu-pe1lo
    @ThangarajBabu-pe1lo 8 หลายเดือนก่อน

    புனித பிரான்சிஸ் சவேரியாரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @user-ec7mw2js9f
    @user-ec7mw2js9f 8 หลายเดือนก่อน

    Thank you so much

  • @anburajj5347
    @anburajj5347 9 หลายเดือนก่อน

    S.T Francis Xavier engaludaya kudumpathin pathukavalare engalukkaha vendi kollum thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenraja5093
    @praveenraja5093 9 หลายเดือนก่อน

    Savariyappa 🙏🙏🙏🥰🥰🥰♥️♥️♥️

  • @rajantony703
    @rajantony703 9 หลายเดือนก่อน

    Thank father

  • @francisxavier8683
    @francisxavier8683 9 หลายเดือนก่อน

    Yenna tharuven Yenna tharuven padal yennai muzhuthum kadavulidam arpanikka, good song, Thankyou for the Song, Thankyou Jesus.

  • @josephinepaul4194
    @josephinepaul4194 9 หลายเดือนก่อน

    Please mother Mary prayer for me 🙏🙏 for my sick 🙏🙏🙏❤❤🌹

  • @josephinepaul4194
    @josephinepaul4194 9 หลายเดือนก่อน

    Amen🙏🙏🙏❤

  • @SheelaJestin-gt7km
    @SheelaJestin-gt7km 9 หลายเดือนก่อน

    Mother Mary please help me

  • @thatchermary7337
    @thatchermary7337 9 หลายเดือนก่อน

    Super v r going to sing this week

  • @user-cq6jk4nf3t
    @user-cq6jk4nf3t 9 หลายเดือนก่อน

    புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ❤️❤️🙏🙏🙏🙏

  • @PiramanayagamP
    @PiramanayagamP 9 หลายเดือนก่อน

    Epam sitha helpkku mikka Thanks mathava

  • @user-ec7mw2js9f
    @user-ec7mw2js9f 9 หลายเดือนก่อน

    Thank you

  • @stellafrancis7143
    @stellafrancis7143 9 หลายเดือนก่อน

    All songs are dedicated to Amma Marikke

  • @user-ec7mw2js9f
    @user-ec7mw2js9f 9 หลายเดือนก่อน

    Thank you

  • @devaarasi7168
    @devaarasi7168 9 หลายเดือนก่อน

    Amma unthan anbil naan mattrum ean pillaikal irukka vendikolkiren

  • @user-pm4rh2qh8r
    @user-pm4rh2qh8r 9 หลายเดือนก่อน

    ❤❤

  • @anitaclaude7739
    @anitaclaude7739 9 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @jamesm9822
    @jamesm9822 10 หลายเดือนก่อน

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @jamesm9822
    @jamesm9822 10 หลายเดือนก่อน

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @user-dd3ij4ir7l
    @user-dd3ij4ir7l 10 หลายเดือนก่อน

    Pls send me this Entrance Song Notation (Church use) D. Carounagarane Boliva 29 St Xavier Church St Murungapakkam Pet Puducherry 605 004

  • @user-ec7mw2js9f
    @user-ec7mw2js9f 10 หลายเดือนก่อน

    Thank you

  • @thomasxavier3425
    @thomasxavier3425 10 หลายเดือนก่อน

    அம்மா எங்கலுக்கா வேண்டிக் கொள்ளுங்கள்

  • @jku6762
    @jku6762 10 หลายเดือนก่อน

    Romba anbana matha padalgal ❤

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 10 หลายเดือนก่อน

    Annaiye engal thunba mudichucalai avirum thaye n sahothari kudumbathaiyum asirvathoyum iam hindu

  • @jayapriya7989
    @jayapriya7989 10 หลายเดือนก่อน

    எங்கள் குடும்பம் துன்பம் முடிச்சுகளை அவிழ்க்கும் தாயே உம்மை வனங்குகிறேன் அம்மா

  • @Annan6539
    @Annan6539 10 หลายเดือนก่อน

    இயேசுவே ஆண்டவரே உமக்கே புகழ் ஆமென்

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 10 หลายเดือนก่อน

    Ensahothari mahanukku nalla puthiai tharum heis eight years old iamhindu

  • @PraveenKumar-vq2xh
    @PraveenKumar-vq2xh 10 หลายเดือนก่อน

    amen ❤❤❤❤

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 10 หลายเดือนก่อน

    Engal kudumba thumba mudichukalaiyum en sahothari kudumba thumba mudichukalaiyum avirum thaye

  • @ranerane3906
    @ranerane3906 10 หลายเดือนก่อน

    ❤ஆமென்

  • @emers38
    @emers38 10 หลายเดือนก่อน

    Mother Mary cure my wife and bless her Amen

    • @emers38
      @emers38 10 หลายเดือนก่อน

      Amen